இந்திய ராணுவத்தை கவுரவிக்க ஜூன் 18ல் வினாடி - வினா

சென்னை:இந்திய ராணுவத்தை கவுரவிக்கும் வகையில், கடற்படை, போர் வரலாறுஉட்பட ஏழு தலைப்புகளில் 'ஆன்லைனில்' நடக்கவுள்ள வினாடி - வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வினாடி - வினா தேர்வு நடத்தும் 'எக்ஸ் குஸ்சிட்' நிறுவனம் சார்பில், கோடை கால வினாடி - வினா திருவிழா போட்டி, ஜூன் 18 முதல் 24ம் தேதி வரை, ஏழு நாட்கள் நடக்க உள்ளது.

இந்திய ராணுவத்தை கவுரவிக்கும் வகையில், இந்திய ஆயுதப்படைகளின் பிரிவு, விமானப்படை, ராணுவம், கடற்படை, இந்திய போர் வரலாறு, முக்கிய இயந்திரங்கள், நாட்டின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில், போட்டி நடக்கிறது.

ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் கேட்கப்படும் 15 கேள்விகளுக்கு, தலா ஒரு நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும்.

போட்டி, ஆன்லைனில் மட்டுமே நடக்கும்; தினமும் மாலை 6:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை பங்கேற்கலாம். ஒருமுறை இணையதள பக்கத்தில் நுழைந்தால் போட்டியை நிறைவு செய்தபின் வெளியேற வேண்டும்.

கட்டணம், 500 ரூபாய் செலுத்த வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்களும் பங்கேற்று, வெற்றி பெறுவோருக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.

பங்கேற்க விரும்புவோர், 98412 70711 என்ற எண்ணில் பதிவு செய்துக்கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement