மாவட்டத்தில் சராசரியாக 6.78 மி.மீ., மழை பதிவு

தேனி: மாவட்டத்தில் 13 இடங்களில் சராசரியாக 6.78 மி.மீ., மழை பதிவானது.

மாவட்டத்தில் மழை பொழிவை பதிவு செய்வதற்காக 13 இடங்களில் மழை மானிகள் செயல்படுகின்றன. அவற்றில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு அரண்மனைப்புதுார் 2 மி.மீ., வீரபாண்டி 13.8 மி.மீ., பெரியகுளம் 4.6 மி.மீ., மஞ்சளாறு 4 மி.மீ., சோத்துப்பாறை 2 மி.மீ., வைகை அணை 1.4 மி.மீ., போடி 3.2 மி.மீ., உத்தமபாளையம் 4.6 மி.மீ., கூடலுார் 2 மி.மீ., முல்லைப் பெரியாறு அணையில் 27.6 மி.மீ., தேக்கடி 21.4 மி.மீ., சண்முகாநதி அணை பகுதியில் 1.6 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம் 88.2 மி.மீ., சராசரியாக 6.78 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

Advertisement