மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை மரங்கள் விழுந்ததால் மின்தடை

தேனி: மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன், மழை பெய்தது. ஆங்காங்கே மின்சார ஒயர்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின் வினியோகம் தடை பட்டது.

தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால் கேரள மாநிலம், தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் சீலையம்பட்டி காமாட்சிபுரத்தில் ரோட்டில் மரம் சாய்ந்தது. அகமலையில் டிரான்ஸ்பார்மர் மீது மரம் சாய்ந்தது. தேனி நகர் பகுதியில் சில இடங்களில் மரகிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் அடிக்கடி மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

அதிகரிப்பு



சில நாட்களாக மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement