தொழிலாளி பலி
தேனி: தேனி டொம்புச்சேரி சுரேஷ் 48, இரு குழந்தைகள் உள்ளன. இவர் தேனியில் உள்ள தனியார் பருப்பு மில்லில் பணிபுரிகிறார்
. மில் வளாகத்தில் நேற்று கேமரா பொருத்தம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அல்லிநகரம் போலீசார் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி இறந்த சுரேஷின் உறவினர்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement