மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ விவகாரத்தில் முடிவு

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி ஆட்டோ ஸ்டாண்டில், அலாவுதீன் என்-பவர் மீட்டர் கட்டணம் மற்றும் மினிமம் சார்ஜ், 50 ரூபாய் என எழுதப்பட்ட போர்டுடன் ஆட்டோவை ஸ்டாண்டில் கொண்டு வந்து நிறுத்தினார். இதற்கு பிற ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டாண்டுக்குள் நிறுத்த அனுமதி மறுத்தனர்.
இதுகுறித்து புளியம்பட்டி போலீசிலும் புகாரளித்தனர். இதுதொ-டர்பாக இன்ஸ்பெக்டர் சுப்பு ரத்தினம், ஆட்டோ டிரைவர்க-ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் போக்குவரத்து விதிக-ளின்படி, லோக்கல் மினிமம் சார்ஜ், 70 ரூபாய் வசூலிக்க வேண்டும். அதே சமயம் மினிமம் சார்ஜ், 50 ரூபாய் என போர்டு பொருத்தப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கவும் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார்.
இதை ஆட்டோ டிரைவர்கள் ஏற்றுக் கொண்டதால், மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ விவகாரம் முடிவுக்கு வந்தது.

Advertisement