ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி

சூளகிரி: சூளகிரி வட்டார வேளாண் துறையின் அட்மா திட்டம் சார்பில், காளிங்காவரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்-குனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் ரஞ்சிதா, துணை வேளாண் அலுவலர் பழனி, உதவி தோட்டக்-கலை அலுவலர் ராம்குமார், உதவி வேளாண் அலுவலர் வள்ளி-யம்மாள், பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர், பல்வேறு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.


வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உழவன் செயலியின் பயன்கள் மற்றும் பதிவிறக்கம் செய்வது குறித்தும், உயிர் உரங்கள் பற்றியும் விளக்கமளித்தார். விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பாரம்பரிய நெல் ரகங்கள், சிறு தானியங்கள் கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை, பழனிசாமி செய்திருந்தார்

Advertisement