பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி, பாகலுார் ஹவுசிங் போர்டிலுள்ள கட்சி அலுவலகத்தில், பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் விழா நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்து, இருசக்கர வாகன ஓட்டிகள், 1,071 பேருக்கு இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கினர்.


ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம், மாநகர பகுதி செய-லார்கள் ராஜூ, அசோகா, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, கவுன்சிலர் தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement