குளித்தலை பஸ் ஸ்டாண்டில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை

குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்ட், கடந்த, 2024ல், 74 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு திறக்கப்-பட்டது. ஏற்கனவே இருந்த கடைக்காரர்களுக்கு, மீண்டும், 19 கடைகள் வழங்கப்பட்டன. மேலும், விரிவாக்க பணியில் கிடைத்த கூடுதல் இடத்தில், 13 புதிய கடைகளுக்கு ஏலம் விடப்-பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்து ஓராண்டாகியும், கட்டண கழிப்பிடம் கட்டும் பணி முடிவடையவில்லை. மேலும், இலவச சுகாதார வளாகம், இருசக்கர வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்-படவில்லை.
பயணிகளின் அத்தியாவசிய தேவையான சுத்தி
கரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்படவில்லை. பஸ் ஸ்டாண்ட் உள்ளே செயல்படும்
டீக்கடை, ஜூஸ் கடை, பேக்கரி உள்ளிட்ட கடைகளின் கழிவுநீர் செல்ல வடிகால் அமைக்கப்பட
வில்லை. இதனால் கடையின் கழிவுநீரை சாலையில் பாய-விட்டு வருகின்றனர்.
பஸ் செல்லும்போது கழிவுநீர், பயணிகள் மீது தெளிப்பதால் கடுப்பாகின்றனர். எனவே, குளித்தலை பஸ் ஸ்டாண்டில், அடிப்-படை வசதி செய்து
தர வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement