கோடை வெயிலால் மாதாந்திர மின்தடை ரத்து

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில், மாதத்தில் அமா-வாசை தினத்தில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்வது வழக்கம். கடந்த, இரண்டு மாதங்களாக பொதுத்தேர்வு உள்ளிட்ட பள்ளி தேர்வுகள் நடந்ததால், மாதாந்திர மின்தடை செய்யப்பட-வில்லை. சில இடங்களில் இருந்த பராமரிப்பு பணிகளை, சில மணி நேரத்தில் செய்து முடித்துக்கொண்டனர். இன்று அமா-வாசை என்பதால் மின் தடை இருக்கும் என, பொதுமக்கள் எதிர்-பார்த்த நிலையில் இன்றும் மின்நிறுத்தம் இல்லை என, மின்வா-ரிய அதிகாரி
கள் அறிவித்துள்ளனர். கோடை வெப்பம் காரணமாக இந்த மாதம் நடக்க இருந்த
மின் தடையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement