சுட்டுப் பிடித்த கொள்ளையனிடம் சங்ககிரி மாஜிஸ்திரேட் விசாரணை

சேலம்: சங்ககிரியில் சுட்டுப்பிடித்த கொள்ளையனிடம், மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.


சேலம் மாவட்டம் ஓமலுார், பொட்டியபுரம் அருகே கட்டிக்காரனுாரை சேர்ந்த, ராஜா மகன் நரேஷ்குமார், 32. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழகம் முழுதும், 21 வழக்-குகள் உள்ளன. இந்நிலையில் சங்ககிரி, வைகுந்தம் அருகே, கடந்த, 3ல் பெண்ணிடம், தோடு, மூக்குத்தி பறித்த வழக்கில் நரேஷ்குமாரை, மகுடஞ்சாவடி போலீசார் தேடினர்.
நேற்று முன்தினம், சங்ககிரி அருகே ஆஞ்சநேயர் கோவில் மலை அடிவாரத்தில் பதுங்கியிருந்த நரேஷ்குமாரை, போலீசார் சுட்டுப்பிடித்தனர். அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்
பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை, 4:40 மணிக்கு, சங்ககிரி ஜே.எம்., 2வது நீதிமன்ற நடுவர் சிவக்குமார், சேலம் அரசு மருத்துவம-னையில் நரேஷ்குமாரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தார். தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசா-ரித்தார். பின் வரும் ஜூன், 6 வரை, நரேஷ்குமாரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Advertisement