விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமியில் மாணவர்களுக்கு ஆலோசனை முகாம்




தர்மபுரி: தர்மபுரி, முகமது அலி கிளப் ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகே நக-ராட்சி வணிக வளாகம், 2-வது தளத்திலுள்ள விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் பயிற்சி மாணவர்களுக்கான ஆலோசனை முகாம் நடந்-தது.

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தாளாளர் மீனா இளங்-கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவீன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி வரவேற்றார். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன் சாதனையாளர்-களை அறிமுகப்படுத்தி பேசினார்.இதில், விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமியில் பயிற்சி பெற்-றவரும், பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரும், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2-ஏ' தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்றவருமான, தர்மபுரியை சேர்ந்த ஜனா நந்தன், 'குரூப்- 2' தேர்வில் மாநி-லத்தில், 18-ம் இடம் பிடித்த முத்துக்குமரன் ஆகியோர், மாணவர்-களுக்கு தேர்வுக்கான பயிற்சி திட்டம், நேர மேலாண்மை, சுய ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவை குறித்து ஆலோசனைகள் மற்றும் தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பயிற்சியாளர் ஷேக் தாவூத் நன்றி கூறினார்.

Advertisement