சந்தைக்கு வரத்து குறைவு வெற்றிலை விலை உயர்வு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துாரில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழ-மைகளில், வெற்றிலை வாரச்சந்தை நடக்கிறது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபா-ரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர்.
இங்கு, மணியம்பாடி நல்-லகுட்டல ஹள்ளி, கோம்பை, அஸ்தகியூர், முத்தனுார், கேத்தி-ரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்-தனர். கடந்த வாரம், 128 கட்டு கொண்ட ஒரு மூட்டை வெற்-றிலை, ஆரம்ப விலை, 3,000 முதல், அதிகபட்சமாக, 8,000 ரூபாய் வரை விற்பனையானது, நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆரம்ப விலை, 5,000 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 10,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, 2,000 ரூபாய் விலை கூடுதலாக விற்பனையானது.
மேலும்
-
ஜார்க்கண்டில் தேடப்பட்டு வந்த நக்சலைட் சுட்டுக்கொலை
-
நீர் வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!