கவுன்சிலருக்கு மிரட்டல் போதை ஆசாமிக்கு 'காப்பு'

கரூர்: கரூர் அருகே, கவுன்சிலரை மிரட்டிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கரூர், வெங்கமேட்டை சேர்ந்தவர் வடிவேல், 46; கரூர் மாநக-ராட்சி, 2வது வார்டு தி.மு.க., கவுன்சிலர். நேற்று முன்தினம் பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், 45, என்பவர், இவரை வழிமறித்து போதையில் தகராறு செய்துள்ளார். இரண்டு பேருக்கும் வாய் தகராறு முற்றியுள்ளது. அந்த நேரத்தில், ரமேஷ் கல்லை எடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகார்படி, வெங்கமேடு போலீசார், ரமேஷை கைது செய்தனர்.

Advertisement