மீன் விற்பனை மந்தம்

மீன்பிடி தடை காலம் காரணமாக தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நரசிம்மர் ஜெயந்தி, முகூர்த்த தினம், சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட காரணங்களால் ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை குறைந்தது. நேற்று குறைந்தளவு மீன்களையே வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்; மொத்த வரத்து, 45 டன்னாக இருந்தது.

நேற்று சிவராத்திரி, இன்று அமாவாசை என்பதால், நேற்று காலை முதலே வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கடந்த இரு வாரங்களாக வரத்தும், விற்பனையும் குறைந்த நிலையில், நேற்றும் மீன் விற்பனை மற்றும் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை.

Advertisement