மயில்ரங்கம் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக யாக சாலை முகூர்த்தக்கால்

திருப்பூர் : வெள்ளகோவில், மயில்ரங்கத்தில் உள்ள மகா மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு 46 ஆண்டுக்குப் பின்னர் தற்போது கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது. இதற்காக யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நடந்தது.வெள்ளகோவில் அருகேயுள்ள மயில்ரங்கம் கிராமத்தில் நுாற்றாண்டுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வரும் ஜூன் 6 அதிகாலை 5:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.முன்னதாக வரும் 4ம் தேதி, விக்னேஷ்வர பூஜை. கணபதி ேஹாமம், முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் யாக சாலை வந்து சேரும் நிகழ்ச்சி, கிராம சாந்தி நடைபெறவுள்ளது.அடுத்து 5ம் தேதி, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவையும், 6ம் தேதி, நான்காம் கால யாக பூஜைகளைத் தொடர்ந்து கோவில் மஹா கும்பாபிேஷகமும் நடைபெறவுள்ளது.கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்க முகூர்த்தக் கால் அமைக்கும் பூஜையும், முளைப்பாலிகை அமைக்கும் நிகழ்ச்சியும் நடந்தன.இதில் கோவில் மற்றும் திருப்பணி குழுவினர், ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
---
கும்பாபிேஷகத்தையொட்டி, மயில்ரங்கம் மகா மாரியம்மன் கோவிலில் யாக சாலை அமைக்க முகூர்த்தக்கால் பூஜை நடந்தது.
மகா மாரியம்மன் கோவில் நுாற்றாண்டுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது. கோவில் மற்றும் கோவிலுடன் சேர்ந்து அமைந்துள்ள கணபதி, முருகன் மற்றும் பேச்சியம்மன் ஆகிய கோவில்களுக்கு கடந்த 1979ல் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.அதன் பின் 46 ஆண்டுகள் கழித்து தற்போது தான் இக்கோவில் கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை நிறைவடைந்துள்ளன.
மேலும்
-
ஜார்க்கண்டில் தேடப்பட்டு வந்த நக்சலைட் சுட்டுக்கொலை
-
நீர் வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!