சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு;கோவையில் 62 சதவீதம் பேர் பங்கேற்பு

கோவை: கோவையில் நேற்று நடந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைதேர்வை, 62 சதவீதம் பேர் எழுதினர்.

நாடு முழுவதும், 79 நகரங்களில் தேர்வு நடந்தது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலுார் ஆகிய ஐந்து நகரங்களில் தேர்வு நடந்தது.காலை 9:30 முதல், காலை 11:30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2:30 முதல், மாலை 4:30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தன.

கோவை மாவட்டத்தில், 17 மையங்களில், 7,068 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். காலை 7:00 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்துவங்கினர். கடும் சோதனைக்கு பின்னரே அவர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மொபைல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நேற்று காலை நடந்த தேர்வை, 4,425 பேரும், மதியம் நடந்த தேர்வை, 4,386 பேரும் எழுதினர்.

காலை நடந்த தேர்வில், 2,643 பேரும், மதியம் நடந்த தேர்வில், 2,682 பேரும் 'ஆப்சென்ட்' ஆகினர். இரு வேளை தேர்வுகளிலும், 62 சதவீதம் பேர் பங்கேற்றனர்.

பிரதான தேர்வு, ஆக.,22ல் நடக்க உள்ளது.

Advertisement