பார்வையாளர்கள் நிரம்பி வழியும் டவர் பூங்கா பராமரிப்பு படுமோசம்

அண்ணா நகர்,அண்ணா நகரில், மூன்றாவது பிரதான சாலையில், 15.5 ஏக்கர் பரப்பளவில், அண்ணா 'டவர்' பூங்கா எனும் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா உள்ளது. இதில், சிறுவர்களுக்கான போழுதுபோக்கு, ஸ்கேட்டிங் உள்ளிட்ட இடங்களும் உள்ளன.

இங்குள்ள கோபுர டவர், 97.60 லட்சம் ரூபாய் நிதியில், பல்வித அம்சங்களுடன் திறக்கப்பட்டதால் வழக்கத்தைவிட கூடுதலாக பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோடை விடுமுறையை ஒட்டி, காதல் ஜோடிகள், குடும்பத்தினர் என கூட்டம் அள்ளுகிறது. ஆனால், இதன் பராமரிப்பு படுமோசமாக உள்ளதால் சிரமம் ஏற்படுகிறது.

இதுகுறித்து பார்வையாளர்கள் கூறியதாவது:

டவர் கோபுரம் சீரமைப்புக்கு பின், தனியார் வசம் உள்ள பூங்கா முறையாக சீரமைக்கப்பட்டது. தற்போது, பூங்கா முழுதும் இலைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் என, குப்பை வளாகமாக காட்சிளிக்கின்றன.

குறிப்பாக, செயற்கை நீரூற்றுகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நீரூற்று தண்ணீர்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்பட்டுள்ளன. நாய்கள் தொல்லையும் அதிகளவில் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement