மழை வெள்ளத்தை சமாளிக்க ஒட்டியம்பாக்கம் ஓடை சீரமைப்பு

ஒட்டியம்பாக்கம், வண்டலுார், கூடுவாஞ்சேரி உட்பட 15க்கும், மேற்பட்ட பகுதிகளில் இருந்து வடியும் மழைநீர், மதுரப்பாக்கம் - காரணை ஓடையில் கலந்து, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் வழியாக பகிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது.
இந்த ஓடை துார்ந்தும், செடி, கொடிகள் நிறைந்தும் இருந்ததால், கடந்த காலங்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, ஒட்டியம்பாக்கம் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
வெள்ள பாதிப்புக்கு ஓடையை துார்வாராததும் முக்கிய காரணம் என, பகுதிவாசிகள் கூறினர். அதனால், அதை துார் வாரி சீரமைக்க வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஒட்டியம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம், மதுரபாக்கம் - காரணை வரையில் உள்ள 2 கி.மீ., நீளமும், 80 அடி அகலம் உடைய ஓடையை, நீர்வளத் துறையின் அனுமதி பெற்று, துார் வாரி சீரமைக்கும் பணி மேற்கொண்டு வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement