ஆம்புலன்ஸ் பைலட் தினம்

திண்டுக்கல் : ஆம்புலன்ஸ் பைலட் (டிரைவர்) தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 108 ஆம்புலன்ஸ் பைலட் நந்தகுமாரை இந்த ஆண்டுக்கான சிறந்த பைலட்டாக தேர்வு செய்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.கண்காணிப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு கலந்து கொண்டனர்.

Advertisement