கவியரங்கம்

மதுரை, : மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'அண்டை மொழிகள் அழிந்தது ஏன்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார்.

செயலாளர் இரா.ரவி வரவேற்றார். வரதராஜன், இராம பாண்டியன், பால் பேரின்பநாதன், குறளடி யான், லிங்கம்மாள், அனுராதா, முனியாண்டி, அஞ்சூரியா, ஜெயராமன், ஆறுமுகம், இதயத்துல்லா, சுந்தரம்பாண்டி, பழனி ஆகியோர் கவிதை பாடினர். சிறப்பாக கவிதை பாடிய நால்வருக்கு தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் திருக்குறள் உரை நுால் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement