பால்குடம் எடுத்து நேர்த்திகடன்

கமுதி : கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்பிடாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 34 வது குருபூஜை விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விவசாயம் செழிக்கவும், பருவமழை பெய்ய வேண்டி காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர்.

முத்தாலம்மன் மற்றும் தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை புதுக்கோட்டை கிராமத்தினர் செய்தனர்.

Advertisement