தி.மு.க., செயற்குழு கூட்டம்

காங்கேயம், காங்கேயம் நகர தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று காலை நடந்தது. நகர அவைதலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் சேமலையப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.

மகளிர் உரிமைத்தொகை பெறாத, மகளிர் விண்ணப்பங்களை வீடு தோறும் சென்று பெற்று, உரிமைத்தொகை கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். காங்கேயம் நகராட்சி வாரச்சந்தை பணிகளை துரிதப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement