மூடு பனியால் கொண்டை ஊசி வளைவில் இறங்கிய ஆட்டோ

சேந்தமங்கலம் ;கொல்லிமலையில், அதிக பனியால் கொண்டை ஊசி வளைவில், சரக்கு ஆட்டோ சாலை தெரியாமல் பள்ளத்தில் இறங்கியது.

மோகனுாரை சேர்ந்தவர் சேகர், 45, டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை, சேலத்தில் இருந்து கொல்லிமலைக்கு வீட்டு உபயோக பொருட்களை, சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றார். பின்னர், பொருட்களை இறக்கி வைத்து விட்டு மோகனுாருக்கு காரவள்ளி சாலையில் இறங்கி வந்துள்ளார்.

அப்போது, பனி அதிகமாக இருந்ததால் மஞ்சள் விளக்கை எரியவிட்டபடி வந்துள்ளார். 51வது கொண்டை ஊசி வளைவில், ஆட்டோ சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. அந்த வழியாக சென்றவர்கள், சேகரை ஆட்டோவில் இருந்து பத்திரமாக மீட்டனர். கொண்டை ஊசி வளைவில், மூடு பனி காரணமாக சரக்கு ஆட்டோ பள்ளத்தில் இறங்கியதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் சென்றனர்.
பருவ மழையால் பேரிடர் தகவல் தெரிவிக்க
கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு
நாமக்கல், மே 28
''பருவ மழையால்
ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை, 1,077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்,'' என, கலெக்டர் உமா
பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தென் மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் அபாய குறைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ளது. அதிக மழை பொழியும்பட்சத்தில், வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும், திட்டமிட்டு பேரிடர் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிராம அளவில், முதல் பொறுப்பாளர்களின் பட்டியல் தயார் செய்து, அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் விபரங்களை புதுப்பித்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து துறை
அலுவலர்களும் இணைந்து, தென்மேற்கு பருவமழை காலத்தில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தன்னார்வத்துடன் பணியாற்ற
வேண்டும்.
தென்மேற்கு பருவ
மழையால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 மூலம், 24:00 மணி நேரமும்
தெரிவிக்கலாம்.
இவ்வாறு பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement