சென்னையை சேர்ந்த ஐவர் ஆட்டோ விபத்தில் படுகாயம்

துாத்துக்குடி:சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, விஜயகுமார், 41, அவரது மனைவி அனுப்ரியா, 35, மகள் கயாந்திகா, 10, சசிகலா, 41, சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த பாண்டுரங்கன், 65, ஆகியோர், நேற்று திருச்செந்துார் கோவிலில் தரிசனம் செய்தனர்.

பின், அங்கிருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு செல்ல, ஒரு ஆட்டோவில் ஏறினர். குலசை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ சாலையோரத்தில் இருந்த வேப்ப மரத்தில் மோதியது.

விஜயகுமார், அனுப்ரியா, கயாந்திகா ஆகியோருக்கு லேசான காயமும், பாண்டுரங்கனுக்கு இடுப்பு எலும்பு முறிவும், சசிகலாவிற்கு இரண்டு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. ஐந்து பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement