போதை மாத்திரை விற்றவர் கைது



பள்ளிப்பாளையம் பூலக்காட்டூர் பகுதியில், போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.பள்ளிப்பாளையம் அருகே, பூலக்காட்டூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடந்து வந்தது. இது குறித்து வந்த தகவல்படி, பள்ளிப்பாளையம் போலீசார் பூலக்காட்டூர் பகுதியில் நேற்று கண்காணித்தனர். அப்போது சந்திரசேகர், 25, என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்து வருகிறார் என தெரியவந்தது.


இதையடுத்து, சந்திரசேகரை நேற்று மாலை கைது செய்து, இவரிடம் இருந்து, 10 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 100 ரூபாய்க்கு மாத்திரை வாங்கி, 300 ரூபாய்க்கு சந்திரசேகர் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போதை மாத்திரையை வாங்கும் இளைஞர்கள், தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் உடலில் செலுத்துவர். சிறிது நேரத்தில் போதை வந்து விடும் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement