நிழற்கூடம் அமைக்க கோரிக்கை
எலச்சிபாளையம் மாணிக்கம்பாளையம், பஸ் நிறுத்தத்தில் சாலையின் இருபுறங்களிலும் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எலச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் பஸ்நிறுத்தம் நாமக்கல்-திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதன் அருகில் புள்ளாகவுண்டம்பட்டி, லத்துவாடி, கூத்தம்பூண்டி, சாயக்காடு, அண்ணாநகர், கொண்டன்காடு, நல்லகுமரன்பாளையம், கூப்பிட்டாம்பாளையம், கெங்காரபாளையம், மூலப்பாளையம், பச்சானுார், கரட்டுபாளையம், சின்னமாணிக்கம்பாளையம், மண்ணாடிபாளையம், அத்தப்பம்பாளையம், செல்லிபாளையம், குள்ளம்பா
ளையம் என பல்வேறு ஊர்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு மையப்பகுதியாக அமைந்துள்ளது. சாலையின் இருபுறங்களிலும் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. பஸ்சுக்காக வருவோர் மழை, வெயிலில் நின்று கொண்டே காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, சாலையின் இருபுறங்களிலும் பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
யாரை காப்பாற்ற இந்த வேகம்?
-
பிரதமரின் உதவித்தொகை; 2 லட்சம் விவசாயிகள் ஏக்கம்
-
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்
-
குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு நெல் குவின்டாலுக்கு ரூ.69 உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
-
லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி