25 ஆண்டுக்கு பிறகு சந்தித்த பள்ளி முன்னாள் மாணவர்கள்


கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் பள்ளியில் கடந்த, 2000ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடினர்.

இதில், 60 மாணவ, மாணவியரும், 26 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகளின் பயணத்தை கொண்டாடும் வகையில், பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கடந்த, 25 ஆண்டுகளில் தங்கள் சந்தித்த பிரச்னைகள், பார்த்து வரும் பணிகள், குடும்பத்தில் நடந்த விழாக்கள் என, அனைத்து நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக, மாணவர்கள் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை கவுரவித்து மகிழ்ந்தனர். வெள்ளி விழா நினைவாக, அனைவருக்கும் பள்ளியின் பெயர் பொறித்த வெள்ளி நாணயமும், ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு பெட்டியும் வழங்கினர். நிறைவாக அனைவரும் குடும்பத்துடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisement