ஜமாபந்தியில் நலத்திட்ட உதவி

போச்சம்பள்ளிபோச்சம்பள்ளி தாலுகாவிலுள்ள, போச்சம்பள்ளி, மத்துார், பாரூர், நாகரசம்பட்டி உள்ளிட்ட, 34 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கடந்த, 16ல் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.
ஜமாபந்தி அலுவலராக கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் கலந்து கொண்டார். தாசில்தார் சத்யா முன்னிலையில் நடந்த இந்த ஜமாபந்தியில் மொத்தம், 647 மனுக்கள் பெறப்பட்டு, அதில், 138 மனுக்கள் ஏற்கப்பட்டது. 184 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 322 மனுக்கள் முடிவு செய்யப்பட்டன.
இதில், 1.68 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 இலவச வீட்டுமனை பட்டா, ஒருவருக்கு இயற்கை மரண உதவித்தொகை, 22,500 ரூபாய், 3 பேருக்கு பிறப்புச்சான்று, 30 பேருக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், 77 பேருக்கு ரேஷன் கார்டு, 16 பேருக்கு பட்டா மாற்றம் என, மொத்தம், 129 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், சமூக பாதுகாப்பு தாசில்தார் திலகம், டி.எஸ்.ஓ., ரஹமத்துல்லா, துணை தாசில்தார்கள் பிரியதர்ஷினி, விஜயன், ஆர்.ஐ.,க்கள் கோவிந்தராஜ், சசிகுமார், ரேவதி, கலைச்செல்வி மற்றும் 34, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement