சுட்டுப்பிடித்த கொள்ளையன் 'ஸ்ட்ராங்' அறைக்கு மாற்றம்

சேலம் :சேலம் மாவட்டம் ஓமலுார், பொட்டியாபுரம் அருகே கட்டிக்காரனுாரை சேர்ந்தவர் நரேஷ்குமார், 32. பெண்ணை தாக்கி நகை பறித்த வழக்கில் தேடப்பட்ட நிலையில், இவரை, மகுடஞ்சாவடி போலீசார், கடந்த, 24ல் சங்ககிரி அருகே துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மறுநாள், எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரிடம் சங்ககிரி, 2வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் சிவக்குமார் விசாரணை நடத்தி, ஜூன், 6 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அரசு மருத்துவமனையில் உள்ள, 'ஸ்ட்ராங்' அறைக்கு நரேஷ்குமார் மாற்றப்பட்டு, துப்பாக்கி சகிதமாக போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement