சிறையில் தற்காலிக பணிக்கு அழைப்பு


சேலம் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்(பொ) அறிக்கை:

சேலம் மத்திய சிறையில் மதிப்பூதிய அடிப்படையில் சமூகவியல் வல்லுனர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூகப்பணி, சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியல், வயது வந்தோர் கல்வி ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியல், சமூகவியலில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர், பொது முன்னுரிமை என்ற இட ஒதுக்கீட்டில் வயது வரம்பு, 2024 ஜூலை, 1 அன்று குறைந்தபட்சம், 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம், 34 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு மதிப்பூதியம், 15,000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள், 'சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, சேலம் - 7' எனும் முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் வரும் ஜூன், 5க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விபரம் பெற, 0427 -2403551, 2400639 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement