கரும்பு நிலுவை வழங்கல்



தர்மபுரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலக்கோட்டிலுள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின், 2024-25ம் ஆண்டு அரவை பருவத்தில், கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை, 5.02 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருந்தது.

இதை வழங்கக்கோரி, விவசாயிகள் ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகியோர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். முதல்வர் ஸ்டாலின் கரும்பு நிலுவைத்தொகையான, 5.02 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டதை அடுத்து, இத்தொகை, கரும்பு வழங்கிய விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement