இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம்

கும்மிடிப்பூண்டி,:கவரைப்பேட்டை அருகே கீழ்முதலம்பேடு கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை உள்ளது. அங்கு, 605 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் பெற்று வருகின்றனர்.

எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை இருப்பதால், ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

கட்டடத்தின் மேல் தளத்தில் பல விரிசல்கள் கண்டிருப்பதால், மழை காலத்தில் ரேஷன் கடைக்குள் மழைநீர் ஒழுகி, ரேஷன் பொருட்கள் வீணாவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பற்ற ரேஷன் கடையை இடித்து, அந்த இடத்தில் புதிய ரேஷன் கடை நிறுவ வேண்டும் என பல ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உடனடியாக அரசு நிதி ஒதுக்கி புதிய ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Advertisement