ஜமாபந்தியில் 406 மனுக்கள் ஏற்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த, 20ம் தேதி முதல் அலுவலக நாட்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது.

நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 மனுக்கள் பெறப்பட்டன. இதுவரை, 406 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, விரைவில் தீர்வு காண வேண்டும் என ஜமாபந்தி அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான ராஜ்குமார் தெரிவித்தார்.

Advertisement