ரதவீதிகளை சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு உள்ளூர் பகுதிவாசிகள் மட்டுமின்றி சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
ஜூன் மாதம் ஜெகந்நாத பெருமாள் கோவிலில் லட்சுமி நரசிம்மர் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.
இதையடுத்து சுவாமி நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதில் தெற்கு, மேற்கு மாட வீதி தெருக்கள் மிகவும் சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, லட்சுமி நரசிம்மர் திருவிழாவை முன்னிட்டு சேதமடைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு மாட வீதிகளை சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மோசடி பத்திரங்களை ஐ.ஜி., ரத்து செய்யலாம்: மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை
-
யாரை காப்பாற்ற இந்த வேகம்?
-
பிரதமரின் உதவித்தொகை; 2 லட்சம் விவசாயிகள் ஏக்கம்
-
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்
-
குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு நெல் குவின்டாலுக்கு ரூ.69 உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு