வங்கி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை
திருவனந்தபுரம் : கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள கடக்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். அங்குள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்தார்.
நேற்று, விடிந்து வெகுநேரமாகியும் அவரது வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் அனில்குமார், 55, அவரது மனைவி ஸ்ரீஜா, 50, மகன்கள் அஸ்வின், 25, ஆகாஷ், 22, ஆகியோர் தனித்தனியாக துாக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை துவக்கினார். அனில்குமார் வீட்டில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். கடன் பிரச்னையால் அவர்கள் தவித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாங்க மறு கன்னத்தை காட்ட மாட்டோம்; பனாமாவில் சசிதரூர் பேச்சு
-
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
கட்சிக்கு அவப்பெயர்; மதுரை மேயரின் கணவர் சஸ்பெண்ட்: முதல்வர் வருகை முன்னிட்டு தி.மு.க. நடவடிக்கை
-
ஹோண்டா 'எக்ஸ் - ஏடிவி' 750 சி.சி., அட்வெஞ்சர் ஸ்கூட்டர்
-
டாடா ஆல்ட்ரோஸ் நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக் கார்
-
வங்கதேசத்தில் டிசம்பர் முதல் ஜூன் வரை எந்நேரத்திலும் தேர்தல் நடக்கலாம்: முகமது யூனுஸ் அறிவிப்பு
Advertisement
Advertisement