'ஜூனில் அதிக மழை பெய்யும்'

புதுடில்லி : மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ரவிச்சந்திரன் நேற்று கூறியதாவது:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, ஜூன் மாதத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யலாம்.

அதே சமயம், வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயல்பைவிட குறைவாக மழை பெய்யக்கூடும். ஜூனில் நீண்டகால சராசரி மழைப்பதிவு, 17 செ.மீ., இந்த முறை இதற்கு அதிகமாக பெய்யும்.

ம.பி., சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில், ஜூனில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement