டில்லியிடம் வீழ்ந்தது ஜெய்ப்பூர்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் டில்லி அணி, ஜெய்ப்பூரை வீழ்த்தியது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் டில்லி, ஜெய்ப்பூர் அணிகள் மோதின.

ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் டில்லியின் கியூக் இசாக் 2-1 (5-11, 11-5, 11-9) என ஜெய்ப்பூரின் கனாக் ஜாவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலா 2-1 (4-11, 11-9, 11-10) என டில்லியின் மரியா ஜியாவோவை வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் டில்லியின் மரியா, சத்யன் ஜோடி 3-0 (11-6, 11-10, 11-6) என ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா, கனாக் ஜோடியை வென்றது.
ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் டில்லியின் சத்யன் 3-0 (11-6, 11-7, 11-6) என ஜெய்ப்பூரின் ஜீத் சந்திராவை தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் டில்லியின் தியா 2-1 (11-8, 11-7, 8-11) என ஜெய்ப்பூரின் பிரிட் ஏர்லேண்டை வென்றார்.
முடிவில் டில்லி அணி 11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement