தமிழ் தலைவாஸ் அணியில் அர்ஜுன்

1

மும்பை: புரோ கபடி லீக் வீரர்கள் ஏலத்தில் தமிழ் தலைவாஸ் அணி ரூ. 1.13 கோடிக்கு அர்ஜுனை வாங்கியது.
புரோ கபடி லீக் 12வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் இரண்டு நாள் நடக்கிறது. நேற்றைய முதல் நாளில் ஈரான் வீரர் முகமது ரேசா, ரூ. 2.23 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. புரோ கபடி லீக் ஏல வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, ரூ. 2 கோடிக்கு மேல் ஏலம் போன வீரர் என பெருமை பெற்றார் ரேசா.
தேவங்க், ரூ. 2.20 கோடிக்கு பெங்கால் அணியில் இணைந்தார். டில்லி அணி ரூ. 1.90 கோடிக்கு அஷுவை வாங்கியது. பெங்களூரு புல்ஸ் அணி ரூ. 1.13 கோடி கொடுத்து, யோகேஷ் தாஹியாவை தட்டிச் சென்றது.
தமிழ் தலைவாஸ் அணி ரூ. 1.41 கோடிக்கு அர்ஜுன் தேஸ்வலை வாங்கியது. கடந்த இரு சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய 'ஆல் ரவுண்டர்' பவன் ஷெராவத்தை, தமிழ் தலைவாஸ் அணி ரூ. 59.50 லட்சத்துக்கு மீண்டும் வாங்கியது. இதற்கு முன் கடந்த 9 வது சீசனில் இவர், தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடினார். பாரத் ஹூடா (ரூ. 81 லட்சம்), சுபம் ஷிண்டேவை (ரூ. 80 லட்சம்) தெலுங்கு டைட்டன்ஸ் அணி கொண்டு சென்றது. தீபக், ரூ. 86 லட்சத்திற்கு பாட்னா அணியில் இணைந்தார்.

Advertisement