பேச்சு ஸ்ட்ராங்; செயல் வீக்: உதயகுமார்

மதுரை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை:
'பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்' என்று திரைப்படத்தில் சொல்லுவார்கள். அதுபோல் முதல்வர் ஸ்டாலின் பேச்சு 'ஸ்ட்ராங்காக' இருக்கிறது. ஆனால் செயல் 'வீக்'காக இருக்கிறது.
அவருக்கு எப்போதும் பழனிசாமி நினைவுதான். அதனால்தான் அவரை பற்றி, மதுரை பொதுக்குழுவில், நம்பிக்கை இழந்து, விரக்தியில், அதீத கற்பனையில் பேசியிருக்கிறார்.
'ஏழாவது முறையாக தி.மு.க., வெற்றி பெறும். இரண்டாவது முறையாக திராவிட மாடல் தொடரும்' என்று உங்கள் பேச்சு தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கருத்து கூறிவிட்டு, 'நான் இதை மமதையுடன் பேசவில்லை' என ஆணவத்துடன் பேசி உள்ளீர்கள்.
அதன் உச்சமாக பழனிசாமியை நீங்கள் மோசமாக விமர்சித்தது, அ.தி.மு.க., தொண்டர்களால் ஏற்க முடியவில்லை. தொடர்ந்து இதுபோன்று பேசினால், நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வேகமாக வென்றது இங்கிலாந்து * கோப்பை கைப்பற்றி அசத்தல்
-
அரையிறுதியில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
-
இந்திய ஜோடி வெற்றி * இந்தோனேஷிய பாட்மின்டனில்
-
பெங்களூரு முதல் கும்பமேளா வரை: இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல்
-
சாதிப்பாரா நீரஜ் சோப்ரா: 'கிளாசிக்' ஈட்டி எறிதலில்
-
டி.என்.பி.எல்., கிரிக்கெட்: திண்டுக்கல்-கோவை மோதல்