வாலிபால்: பைனலில் இந்தியா

பெர்கானா: உஸ்பெகிஸ்தானில் ஆண்களுக்கான சர்வதேச தேசிய லீக் வாலிபால் தொடர் நடக்கிறது. 7 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தானுடன் 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. இந்திய அணி முதல் போட்டியில், ஈரானிடம் 1-3 என தோற்றது. அடுத்த போட்டியில் 3-0 என துர்க்மெனிஸ்தானை வென்றது.

பின் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 3-0 என வீழ்த்தியது. பைனலுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் இந்தியா ('நம்பர்-51'), கஜகஸ்தான் ('நம்பர்-52') மோதின. முதல் செட்டை 26-24 என வென்ற இந்தியா, அடுத்த இரு செட்டை 19-25, 23-25 என தோற்றது. 4வது செட்டில் எழுச்சி பெற்ற இந்தியா 25-21 என வசப்படுத்தியது. கடைசி, 5வது செட்டையும் 15-13 என வென்றது. முடிவில் இந்தியா 3-2 என 'திரில்' வெற்றி பெற்றது. தொடர்ந்து 4 வெற்றியுடன் பைனலுக்கு முன்னேறியது.

Advertisement