ஹாக்கி: இந்தியா வெற்றி

டப்ளின்: சர்வதேச ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4-0 என அயர்லாந்தை வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக் தொடர் நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) 'டாப்--3' இடத்தில் உள்ளன.
அடுத்து இந்திய அணி, நெதர்லாந்து மண்ணில் நெதர்லாந்து (ஜூன் 7, 9), அர்ஜென்டினா (ஜூன் 11, 12) அணிகளுடன் விளையாட உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் அயர்லாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. இந்தியாவுக்கு மன்தீப் சிங், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கைகொடுக்க, முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இந்தியாவின் தில்பிரீத் சிங், இரண்டு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!
-
திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு
-
பெங்களூரு துயர சம்பவம்: கர்நாடகா அரசுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
-
சாலையோர வீட்டுக்குள் புகுந்தது கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் பலி
-
போக்குவரத்து துறை பழுதாகி விட்டதா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தி.மு.க., எண்ணம் கானல் நீராகும்: உறுதியுடன் சொல்கிறார் இ.பி.எஸ்.,
Advertisement
Advertisement