வாழ்க்கை துணைவர் பெயர்; பாஸ்போர்ட்டில் சேர்க்க புதிய நடைமுறை அறிமுகம்

சென்னை: பாஸ்போர்ட் விண்ணப்பதாரர், தங்களின் வாழ்க்கை துணையை சேர்க்க, நீக்க, புதிய நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, மறுமணம் செய்தவர்கள், தங்களின் துணைவர் குறித்த தகவலை சேர்ப்பது சிக்கலான நடைமுறையாக இருந்தது. அதை எளிமைப்படுத்த, 'இணைப்பு ஜெ' என்ற புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வெளியுறவுத்துறை
உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வாழ்க்கை துணைவரின் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ, திருமண சான்றிதழுக்கு பதில், 'இணைப்பு ஜெ' பிரமாண பத்திரத்தை வழங்க வேண்டும். அதில், இரு தரப்பினரும் கையொப்பமிட்டு, சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படத்தை இணைக்க வேண்டும். இருவரின் முழு பெயர், முகவரி, பிறந்த தேதி, திருமண நிலை, ஆதார் எண், வாக்காளர் எண், பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மறுமணத்திற்கு பிறகு, புதிய துணைவரின் பெயரை சேர்க்க, விவாகரத்து ஆணை, மறுமண சான்றிதழ், முன்னாள் துணைவரின் இறப்பு அல்லது மறுமண சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் விபரங்களை, 'https://www.passportindia.gov.in/psp' என்ற இணையதளத்தில் காணலாம்.





மேலும்
-
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
-
வெற்றியை கொண்டாட ரோடு ஷோ தேவையில்லை: சொல்கிறார் இந்திய அணி பயிற்சியாளர்
-
கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: பெங்களூரு போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்: விசாரணை கமிஷன் அமைப்பு
-
581 துணை ராணுவ கம்பெனி, ஜாமர்கள், ட்ரோன்கள்: அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு
-
ராமர் தர்பார் பிரதிஷ்டை வரலாற்று சிறப்புமிக்க தருணம்: பிரதமர் பெருமிதம்
-
அமைச்சர் மனோ தங்கராஜூக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!