செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

ஜெர்முக்: ஆர்மேனியாவில் சர்வதேச கிளாசிக்கல் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் 7வது சுற்றில் பிரக்ஞானந்தா, ஆர்மேனியாவின் ஹகோபியானை எதிர்கொண்டார். பிரக்ஞானந்தா 78 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் சாம் செவியன் மோதினர். அரவிந்த், போட்டியின் 65 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
ஏழு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 5.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரு இடத்தில் அரவிந்த் (4.5), ஜெர்மனியின் டிமிட்ரிஜ் (4.0) உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நினைவு கோப்பையில் அன்பின் ரசம் காலம் கடந்தாலும் பருக பரவசம்!
-
கைக்கூ! பறவையின் பாச க(வி)தை!
-
புறா சிறகு விரிக்கும் நம் மனம்
-
சித்தராமையா, டி.கே. சிவகுமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
வர்த்தக பதட்டம்: அமெரிக்காவும் சீனாவும் ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை
Advertisement
Advertisement