இங்கிலாந்து அணி வெற்றி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்: முதல் 'டி-20' போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் (1) ஏமாற்றினார். ஜேமி ஸ்மித் (38) ஓரளவு கைகொடுத்தார். ஹாரி புரூக் (6), டாம் பான்டன் (3) நிலைக்கவில்லை. ஜோஸ் பட்லர், 59 பந்தில் 96 ரன் (4 சிக்சர், 6 பவுண்டரி) விளாசினார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்தது. ஜேக்கப் பெத்தேல் (23) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷெப்பர்டு 2 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் (18), ஷாய் ஹோப் (3) ஏமாற்றினர். எவின் லீவிஸ் (39), ராஸ்டன் சேஸ் (24) ஆறுதல் தந்தனர். ரூதர்போர்டு (2), ராவ்மன் பாவெல் (13), ஆன்ட்ரி ரசல் (15), ஷெப்பர்டு (16) சோபிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 167 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஜேசன் ஹோல்டர் (16) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் லியாம் டாசன் 4 விக்கெட் சாய்த்தார்.
மேலும்
-
பனை ஓலை பெட்டி பிரியாணி பக்ரீத் பண்டிகையில் தாராளம்
-
குழந்தை பெற்றெடுத்த மாணவி போக்சோவில் கடைக்காரர் கைது
-
ரூ.10 மட்டுமே கட்டணம் வாங்கிய டாக்டர் காலமானார்
-
டிரைவர் வெட்டி கொலை மர்ம கும்பலுக்கு வலை
-
நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த தவறிய தலைமை செயலர்கள் மீது அவமதிப்பு வழக்கு
-
மனைவிக்கு சூடு வைத்த சந்தேக கணவன் கைது