நெல்லை அணி அபார வெற்றி: சோனு யாதவ் 'ஹாட்ரிக்'

கோவை: சோனு யாதவ் 'ஹாட்ரிக்' சாதனை படைக்க நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருச்சி, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சோனு அசத்தல்: திருச்சி அணிக்கு சுஜய் (12), கேப்டன் சுரேஷ் குமார் (9) ஏமாற்றினர். வாசீம் அகமது (41), ஜாபர் ஜமால் (39) ஓரளவு கைகொடுத்தனர். உதய் குமார் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராஜ்குமார், யுதீஸ்வரன் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். கடைசி ஓவரில் சோனு யாதவ் 'வேகத்தில்' மிரட்டினார். முகிலேஷ் (5), சரவண குமார் (0), ஜெகதீசன் கவுசிக்கை (0) அவுட்டாக்கி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
திருச்சி அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது. ராஜ்குமார் (30) அவுட்டாகாமல் இருந்தார். நெல்லை சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
சந்தோஷ் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் (41), சந்தோஷ் குமார் (45) நல்ல துவக்கம் தந்தனர். அஜிதேஷ் (7), ரித்திக் ஈஸ்வரன் (9), நிர்மல் குமார் (10) நிலைக்கவில்லை. அதிசயராஜ் டேவிட்சன் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ஹரிஷ், ராஜ்குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். சஞ்சய் பந்தை சிக்சருக்கு விளாசிய சோனு யாதவ் வெற்றியை உறுதி செய்தார்.
நெல்லை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹரிஷ் (35), சோனு (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
பங்காளி சண்டையை பிறகு பார்ப்போம்: தினகரன்
-
உருண்டு புரண்டாலும் ஒட்டறது தான் ஒட்டும்!
-
பிரதமரின் பக்ரீத் வாழ்த்தை கேலி செய்த தமிழக அமைச்சர்
-
மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல தி.மு.க., அரசு மீது மார்க்சிஸ்ட் விமர்சனம்
-
'பிடிவாதம் காட்டாமல் முடிவெடுங்கள்': தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., அறிவுரை
-
தேர்தல் தாமதம் வங்கதேச அரசுக்கு கடும் எதிர்ப்பு