தலை நிமிர முடியாத அளவிற்கு தி.மு.க.,தோல்வியடையணும்: கவுதமி நடிகை கவுதமி பேட்டி
ஸ்ரீவில்லிபுத்துார்: ''2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் தலை நிமிர முடியாத அளவிற்கு தி.மு.க.,வை தோல்வியடைய செய்ய வேண்டும்,'' என, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி கூறினார்.
நேற்று காலை 11:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு வந்த கவுதமி தரிசனம் செய்தார்.
பின் அவர் கூறியதாவது: 2026ல் தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து பேசுவேன். ராஜபாளையம் தொகுதியில் நிற்பது குறித்து நான் ஒன்றும் யோசிக்கவில்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து இந்த நேரத்தில் பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையுள்ளது. 2026 தேர்தலில் தி.மு.க., மீண்டும் தலை நிமிர முடியாத அளவிற்கு பாடம் புகட்ட வேண்டும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற பிரசாரம் செய்வேன் என்றார்.
தி.மு.க., கூட்டணியில் இணைந்து ராஜ்யசபா சீட் பெற்ற கமல் குறித்த கேள்விக்கு, மனிதர்கள் யாராக இருந்தாலும் சொன்னதை செயல்படுத்துவதில் திடமாக இருக்க வேண்டும் என்றார்.


மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன