டில்லியை குளிர்வித்தது மழை: ஆனாலும் போக்குவரத்து நெரிசல்

புதுடில்லி: டில்லியில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய்து வெப்பத்தை தணித்து குளிர்வித்தது,ஆனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்தை பாதித்தது.

மழை காரணமாக, டில்லி கண்டோன்மென்ட் அருகே உள்ள அண்டர்பாஸ், ஜாகிரா அண்டர்பாஸ், புல் பிரஹ்லாத்பூர், ஐடிஓ, டெல்லி நஜாப்கர் சாலை மற்றும் டெல்லி ரோஹ்தக் சாலை போன்ற பல பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி, வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிரச்னைகளையும் ஏற்படுத்தியது.

டில்லி விமான நிலைய அதிகாரி கூறுகையில்,மோசமான வானிலை காரணமாக டில்லி விமான நிலையத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டது என்றார்.

Advertisement