தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!

1


சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 18) ஆபரண தங்கம் கிராம், 9,250 ரூபாய்க்கும், சவரன், 74,000 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூன் 19) தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 9,265 ரூபாய்க்கும், சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்து, 74,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.



இந்நிலையில் இன்று (ஜூன் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு சவரன் தங்கம் விலை ரூ.74 ஆயிரத்திற்கு கீழே குறைந்துள்ளது. தங்கம் விலை சற்று குறைந்து, நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

Advertisement