ஸ்டாலின் அமைச்சரவையில் வேலுவும், முருகனும் அமைச்சர்கள்

முருகன் பெயரை வைத்து, தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என அமித் ஷா நினைக்கிறார். வேலையும், முருகனையும் வைத்து வெற்றி பெறுவோம் என, பா.ஜ., தலைவர் நாகேந்திரன் சொல்லுகிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில்தான் வேலுவும், துரைமுருகனும் அமைச்சர்களாக இருக்கின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில், ஐந்து படை வீடுகளில் தி.மு.க., தான் வெற்றி பெற்றது. திருப்பரங்குன்றத்தில், தி.மு.க., போட்டியிடாததால் கைவிட்டு போனது. எவ்வளவு பெரிய மாநாடு போட்டாலும், ஒரே ஒரு கூட்டம் போட்டு மக்களை எங்கள் பக்கம் இழுத்து விடுவோம். தி.மு.க.,வை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அமித் ஷா, ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும், தி.மு.க.,விற்கு ஒரு லட்சம் ஓட்டு கூடும். தி.மு.க.,வை யார் சீண்டினாலும், பழித்தாலும், அவர்களுக்கு கேடு காலம் நெருங்குகிறது என்று அர்த்தம்.
- ஆர்.எஸ்.பாரதி, அமைப்பு செயலர், தி.மு.க.,



மேலும்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு