முருக பக்தர்கள் மாநாட்டால் தி.மு.க., கூட்டணிக்கு பயம்; அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் பேட்டி

முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாதுரையை விமர்சித்து, வீடியோ ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது. மறைந்த தலைவர்களை விமர்சிக்கும வீடியோவை தவிர்த்திருக்கலாம். ஒரு நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி மட்டுமே பேசி, ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க முடியாது.
முருக பக்தர்கள் மாநாடு, தி.மு.க., கூட்டணிக்கு பயத்தையும், பீதியையும் கொடுத்துள்ளது. தி.மு.க.,வுடன் திருமாவளவன் பெயரளவில் மட்டுமே உறவை வைத்துள்ளார்; மனதளவில் உறவை முறித்துக் கொண்டார். கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ளன. தி.மு.க., கூட்டணி முறிய அதிக வாய்ப்புள்ளது. தி.மு.க., ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அ.தி.மு.க., அணியில் இணையும் காலம் விரைவில் வரும். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் விஜய், அ.தி.மு.க.,வோடு கைகோர்ப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.
-- ராஜேந்திர பாலாஜி,
அ.தி.மு.க.,
முன்னாள் அமைச்சர்
மேலும்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு